தலைவி படத்தின் கதைக்களம், படப்பிடிப்பு: ஏ.எல்.விஜய் விளக்கம்

By ஸ்கிரீனன்

'தலைவி' படத்தின் கதைக்களம், படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநர் ஏ.எல்.விஜய் விளக்கமளித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, டிம்பிள், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தேவி 2'. கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 'தலைவி' படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய்

ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான உரிமையை அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. இதில் ஜெ.வாக கங்கணா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு பரதநாட்டியம் தெரியும் என்பதால், அதை கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'தலைவி' படத்தின் கதைக்களம், படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து இயக்குநர் விஜய், “ஜூலை மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறேன். கங்கணா ரணாவத்  ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார். 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்துடன் இணைந்து பணிபுரிவது பெரிய அனுபவமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர், சசிகலா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு இன்னும் நடிகர்கள் முடிவாகவில்லை.

ஜெ. கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரிக்கவுள்ளார் கங்கணா ரணாவத். ஜெயலலிதா அவர்களின் 16 வயதிலிருந்து கதை தொடங்கும். கண்டிப்பாக அனைவரும் பிரமிக்க வைக்கும் வகையில் படம் இருக்கும். அமெரிக்காவிலிருந்து மேக்கப் விஷயங்களுக்காக வரவுள்ளனர்.

கங்கணா ரணாவத்தின் சம்பளம் உள்ளிட்டவை குறித்து தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். 'தலைவி' படத்துக்காக கங்கணா தமிழ் கற்றுக் கொள்கிறார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு 'தலைவி' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளேன். ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பெண் எப்படி ஜெயித்து அந்த ஆணாதிக்கத்தையே ஆழ்ந்தார்கள் என்பது தான் களமாக இருக்கும்” என்று தெரிவித்தார் இயக்குநர் விஜய்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்