’கொரில்லா’ படத்தை நிராகரிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'கீ' படத்தைத் தொடர்ந்து, ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொரில்லா'. ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகி பாபு, சதீஷ், ராம்தாஸ், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் ஜீவாவுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக ஆர்.கே.நாகு ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (ஜூன் 21) வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது வெளியீடு ஜூலை 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவுடன் ஒரு சிம்பன்சியும் நடித்துள்ளது. இந்திய சினிமாவில் முதல் முறையாக பயிற்சியளிக்கப்பட்ட ஒரு சிம்பன்சியை நடிக்க வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிம்பன்சி நடித்திருப்பதால் பீட்டா அமைப்பிடம் இருந்து சான்றிதழ் பெற மிகவும் காலதாமதானது. அச்சான்றிதழ் வந்த பிறகு, படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்து வெளியீட்டுக்குத் தயாரானது.
இந்நிலையில் 'கொரில்லா' படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்றை நடிக்க வைத்துள்ளதால், அந்தப் படத்தை நிராகரிக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் அந்தப் படத்துக்கு பொதுமக்கள் டிக்கெட் வாங்க வேண்டாம் என்று பீட்டா அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பாக ஐந்து காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
* சிறைபிடிக்கப்படும் விலங்குகள் அதன் அம்மாக்களிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் துறையில் பயன்படுத்தப்படும் மனிதக் குரங்குகள், பொதுவாக பிறந்தவுடனேயே அவர்களின் அம்மாக்களிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. இது, தாய், குழந்தை என இரண்டு பேருக்குமே வாழ்நாள் முடியும் வரை இருக்கும் அதிர்ச்சியாகும்.
* அவை வன்முறைக்கு ஆளாகின்றன - பயிற்சியாளர்கள் குரங்குகளைப் பழக்க, உதைப்பது, குத்துவது, அடிப்பது, ஏன் மின்சார ஷாக் வைப்பது என உத்திகளைப் பயன்படுத்தி அவை குறைந்த அளவு டேக்குகளில் நடித்து முடிக்கப் பழக்குகிறார்கள்.
* காட்சி நீளங்கள் குறைவு என்றாலும் விலங்குகள் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுகின்றன. சிம்பன்சி குரங்குகள் பதின் பருவத்தை அடையும்போது அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். பொதுவாக அவை இடுக்கமான கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. அங்கு பல வருடங்கள் தனிமையிலேயே இருக்கின்றன.
* உண்மையான விலங்குகளைப் பயன்படுத்துவது தேவையற்றது. விலங்குகளைத் துன்புறுத்தாமல், காயப்படுத்தாமல், பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், ஜங்கிள் புக் உள்ளிட்ட படங்கள், தொழில்நுட்ப நிபுணத்துவத்தைச் சார்ந்து, கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட மேம்பட்ட காட்சிகளைக் கொண்டு, தத்ரூபமாக விலங்கு கதாபாத்திரங்களைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளன.
* சிம்பன்சிக்கள் மனிதர்களைப் போல் நடந்து கொள்வதாக தவறாகச் சித்தரிக்கப்படும்போது அந்த விலங்கிலும் ஒரு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது அந்த விலங்கினமே அழிந்து போகவும் காரணமாக இருக்கலாம் என டாக்டர் ஜேன் குட்டால் கூறியுள்ளார்.
பீட்டா இந்தியாவின் லட்சியமே, நமது பொழுதுபோக்குக்கு நாம் பயன்படுத்த விலங்குகள் நம் சொத்தல்ல என்பதே என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago