மீண்டும் விஜய் சூர்யா, வடிவேலுவை வைத்து 'ப்ரண்ட்ஸ் 2' எடுக்க வேண்டும் என அவரை நச்சரித்துள்ளேன் என்று ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், விக்னேஷ் பிரபாகர் என்பவரது காமெடி கருத்தால், உலகளவில் ட்ரெண்டானது #Pray_for_Neasamani. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே இந்த ஹேஷ்டேக்கில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.
சித்திக் இயக்கத்தில் வெளியான 'ப்ரண்ட்ஸ்' படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் நேசமணி. அப்படத்தில் வரும் காமெடி காட்சியால்தான் இந்த ட்ரெண்ட் உருவானது. இந்தப் படத்தில் வடிவேலு தலையின் மீது சுத்தியலைக் கை தவறிப் போடும் கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரமேஷ் கண்ணா.
இந்தக் காமெடி காட்சிகளால் இவரது பெயரும் ட்ரெண்டானது. இந்தத் தீடீர் ட்ரெண்ட் குறித்து 'தி இந்து' ஆங்கிலத்துக்கு ரமேஷ் கண்ணா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''கடந்த சில நாட்களாக மதிய உணவையே நான் மாலை தான் சாப்பிடுகிறேன். அவ்வளவு தொலைபேசி அழைப்புகள், தொலைக்காட்சிப் பேட்டிகள். இது அற்புதமான சூழ்நிலை. ஏனென்றால் நாம் 18 வருடங்களுக்கு முன் வெளியான படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க்றோம். இந்தப் புதிய புகழ்ச்சிக்கு ஆரோக்கியமான நகைச்சுவையைக் கொண்டு வந்த இயக்குநர் சித்திக்கிற்கும், மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கும் நன்றி.
'ப்ரண்ட்ஸ்' படத்தில் நடித்தது இன்னும் நினைவில் அப்படியே இருக்கிறது. மலையாளத்தில் ஸ்ரீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் என்னை நடிக்க அணுகினார்கள். அப்போதுதான் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்', 'படையப்பா' படங்களில் நடித்து முடித்திருந்தேன்.
இயக்குநரும், நடிகருமாக இருக்கும் ஒருவர் அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்ததால் நான் இதில் வந்தேன். குஷால்தாஸ் கார்டனில் படப்பிடிப்பு நடந்தது. சுத்தியல் விழும் காட்சியைப் பார்த்தீர்களென்றால் நானும் வடிவேலுவும், இப்போது முன்னணியில் இருக்கும் விஜய், சூர்யாவைவிட அதிகமாக நகைச்சுவை செய்திருப்போம்.
'ப்ரண்ட்ஸ்' படப்பிடிப்பு அவ்வளவு கலகலப்பாக இருந்தது. எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும், ஈகோவும் இல்லை. ரசிகர்களுக்கு நல்ல படத்தைத் தர வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாக இருந்தது. வடிவேலு மதுரையில் இருப்பதால் அவருடன் இன்னும் பேசவில்லை. இயக்குநர் சித்திக்கிடம் பேசினேன். மீண்டும் விஜய், சூர்யா, வடிவேலுவை வைத்து ’ப்ரண்ட்ஸ் 2’ எடுக்க வேண்டும் என அவரை நச்சரித்துள்ளேன்''.
இவ்வாறு ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago