அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, விஜய் பிறந்த நாளன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதனால் 'தளபதி 63' என்று அழைத்து வருகிறார்கள்.
ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளாகும். ஜூன் மாதம் பிறந்திருப்பதை ஒட்டி, விஜய் ரசிகர்களோ இதனை சமூக வலைதளத்தில் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். பல்வேறு திரையரங்குகளில் விஜய் பிறந்த நாளன்று, விஜய் படங்களின் சிறப்புக் காட்சிகளைத் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளனர். தீபாவளி வெளியீடு என்பதால், இந்த தருணத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருக்குமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். அனைத்து பணிகளையும் முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago