கோமாளி பட வெளியீட்டில் வதந்தி: படக்குழுவினர் விளக்கம்

By ஸ்கிரீனன்

ஜெயம் ரவி நடித்து வரும் 'கோமாளி' படத்தின் வெளியீடு தொடர்பாக பரவிய வதந்திக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

'அடங்க மறு' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர்  பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘கோமாளி’. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, பாலிவுட் நடிகை கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிவு பெறவில்லை, ஆனால் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே 'கோமாளி' படம் ஜூன் 28-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியானது. இதனை பலரும் பகிரத் தொடங்கினார்.  இதனால் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் "கண்டிப்பாக ஜூன் 28-ம் தேதி வெளியீடு கிடையாது. இப்போது தான் போஸ்டர்கள் வெளியிடத் தொடங்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

பள்ளியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, 20 கிலோ எடை குறைந்துள்ளார் ஜெயம் ரவி. இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும். ஜெயம் ரவியின் 25-வது படத்தை லட்சுமணனும். 26-வது படத்தை அஹமதுவும் இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்