மேட்ச்சில் தோற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடாது என்று 'Mr. லோக்கல்' தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசினார் சிவகார்த்திகேயன்.
'கனா' படத்தைத் தொடர்ந்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில், விஜய் டிவி ரியோ, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் இன்று (ஜூன் 3) நடைபெற்றது. இதில், படக்குழுவினரோடு தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரையும் பாராட்டிப் பேசிவிட்டு, தன் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து, இந்த மேடையைக் கொஞ்சம் எனக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று 'Mr. லோக்கல்' தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசினார்.
“என்னை இயக்கிக் கொண்டிருப்பது ரசிகர்கள் மற்றும் மக்கள் கொடுக்கக்கூடிய நம்பிக்கை மட்டும்தான். ஜெயிக்கும்போது ஒரு அணியாக நிற்பது மாதிரி தெரியும். தோற்கும்போது தனியாக நிற்கிறோம் என்பது புரியும். ஆனால், தோற்பதோ, தனியாக நிற்பதோ பிரச்சினையில்லை. நிற்கிறோம் என்பதுதான் பிரச்சினை. நான் நிற்கிறேன்.
படம் சரியாகப் போகவில்லை. அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் கதைகள், பிடித்த கதைகள், ரசிக்கிற கதைகள் என்றுதான் வரிசைப்படுத்தி வைத்துள்ளேன். ஒரு மேட்ச்சில் தோற்றுவிட்டோம் என்றால், அந்த மேட்ச் தான் முடியும். வாழ்க்கை முடிந்துவிடாது. அதை நம்புகிறேன்.
இந்த மாதிரி ஒரு மேடையை விட்டுவிட்டுப் போக முடியாது. அவ்வளவு ரசித்து இந்த மேடையைக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் வியர்வை சிந்தி டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில், உங்களுடைய உழைப்பு இருக்கிறது. அதேமாதிரி, நான் பார்க்கும் வேலையில் என் உழைப்பு இருக்கிறது. நான் கடந்து வந்த பாதையில், வேதனை, வலி, துரோகம், நட்பு, பாசம், உழைப்பு... அதைத்தாண்டி இருக்கிற வெறி. அந்த வெறி என்னை விடாது என நினைக்கிறேன். நான் ஓடிக்கொண்டே தான் இருப்பேன்.
இன்னும் சூப்பரான படங்கள் பண்ணுவோம். நான் அடுத்து பண்ணும் படங்கள் அனைத்துமே உங்களுக்குப் பிடிக்கும். தயாரிப்பாளருக்கு லாபகரமான படங்களாக இருக்கும். எனது கடைசிப் படம்கூட தயாரிப்பாளருக்குப் பெரிய லாபம்தான். அதைப்பற்றிப் பேச வேண்டாம். ஒரு நடிகனாக மக்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் ஜெயிக்க வேண்டும் என்று வருபவர்கள், சந்தோஷமாகத் திரையரங்கில் இருந்து வெளியே போனால் போதும். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபகரமான படமாக இருக்க வேண்டும் என்றுதான் தயாரிப்பாளராக உழைத்துக்கொண்டே இருக்கிறேன்.
ஒன்றை மட்டும் இறுதியாக சொல்லிக் கொள்கிறேன். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago