சாது போல காட்டிக் கொள்ள வேண்டாம். உங்களுடைய பொய்களையும், இரட்டை வேடத்தையும் அனைவரும் அறிவார்கள் என்று விஷாலுக்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடிக் கொடுத்துள்ளார்
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார்.
இம்முறை நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து, பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் ஸ்வாமிகள் அணி களமிறங்குகிறது. இரு அணிகளுமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாண்டவர் அணியை இணையத்தில் விளம்பரப்படுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சரத்குமார், ராதாரவி இருவரையும் கடுமையாக சாடியிருந்தார்கள். இருவரது சுயநலத்தால், நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரது முகமும் அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோ பதிவு வைரலாக பரவத் தொடங்கியது. இது தொடர்பாக சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் காட்டமான அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்புள்ள விஷால்,
சமீபத்தில் வெளியான உங்களுடைய தேர்தல் பிரச்சார வீடியோவில் நீங்கள் எவ்வளவு தாழ்ந்து போய் விட்டீர்கள் என்பதை எண்ணி அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தேன். உங்கள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் தற்போது போய்விட்டது.
என் தந்தையின் கடந்த காலத்தின் மீது நீங்கள் குத்தியுள்ள முத்திரையை பார்த்து மிகவும் வருந்துகிறேன். அதை உங்களால் நிரூபிக்கவே முடியாது. சட்டம்தான் உயர்ந்தது என்று கூறுவீர்கள், அதே சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்படாத வரை எந்த ஒரு மனிதனும் நிரபராதிதான்.
அவர் குற்றவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார். எனவே உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற கீழ்த்தரமான வீடியோக்கள் உங்கள் தரத்தை காட்டுகிறது.
உங்களை குற்றம் சொல்ல முடியாது, நீங்கள் வளர்ந்த விதம் அப்படி என்று நினைக்கிறேன். இனிமேல் ஒரு சாது போல காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பொய்களையும், இரட்டை வேடத்தையும் அனைவருமே அறிவார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் அப்படிப்பட்ட சாதுவாக இருந்தால் உங்கள் பாண்டவர் அணியைச் சேர்ந்தவர்களே உங்களை விட்டு விலகி உங்களை வீழ்த்த இன்னொரு அணியை ஆரம்பித்திருக்க மாட்டார்கள்.
நீங்கள் இவ்வளவு நாள் நல்லது செய்திருந்தால், இந்த முறை தேர்தலில் போட்டியிடாத என் தந்தையை இழிவுபடுத்துவதற்கு பதில் நீங்கள் செய்த நல்லதை சொல்லி வாக்கு சேகரிக்கலாம். இத்தனை காலமும் உங்களை மதித்து ஒரு தோழியாக உங்களுக்கு ஆதரவாக இருந்தேன். ஆனால் நீங்கள் இதை இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டீர்கள்.
நீங்கள் சாதித்த விஷயங்களை பற்றி வீடியோ வெளியிடாமல் இவ்வளவு தரம் தாழ்ந்து நீங்கள் பிரச்சாரம் செய்வது மிகவும் வருத்தமளிக்கிறது. திரைக்கு வெளியிலாவது நன்றாக நடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் சொல்வது போல உண்மை வெல்லும்
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago