தெலுங்கு மற்றும் இந்திப் படங்களுக்காக மிகவும் உடல் இளைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சாவித்ரி வாழ்க்கை வரலாற்றில் சாவித்ரியாக 'மகாநடி' படத்தில் நடித்ததில் இருந்து கீர்த்தி சுரேஷுக்குப் பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துவிட்டு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ். அதில், மிகவும் உடல் இளைத்துக் காணப்பட்டார். இதனால், பலரும் இப்புகைப்படத்தை இணையத்தில் பகிரத் தொடங்கினர். விளையாட்டை மையப்படுத்திய படங்களில் நடிக்கவுள்ளதால், உடலை அவர் மிகவும் குறைத்துள்ளார் என்று கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் நரேந்திரநாத் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திலும், நாகேஷ் குக்குநூர் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திலும் நடித்து வருகிறார். இதில், நாகேஷ் குக்குநூர் இயக்கும் படம் விளையாட்டை மையப்படுத்தியதாகும்.
மேலும், ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில், புதிய இந்திப் படமொன்றில் நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதில், அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago