ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் முதல் இரண்டு இடத்தில் #HBDEminentVijay மற்றும் #Bigil ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
'பிகில்' என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரில் இரண்டு விஜய் இருப்பது போலவும், மீன் மார்க்கெட் பின்னணி கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதால், பலரும் இந்தப் பின்னணியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்நோக்கவில்லை.
படத்தின் போஸ்டர் வித்தியாசமாக இருந்ததால், பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிரத் தொடங்கினார்கள். இதனால் #Bigil என்ற பெயர் இந்தியளவில் ட்ரெண்ட்டாக தொடங்கியது. தற்போது பலரும் தொடர்ச்சியாக ட்வீட் செய்யவே, உலகளவில் 2-ம் இடத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
மேலும், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு #HBDEminentVijay என்ற ஹேஷ்டேக் மாலை முதலே உலகளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. பல்வேறு ரசிகர்களும் விஜய்யைப் பற்றி தொடர்ச்சியாக இந்த ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்ததால் உலகளவில் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு விஜய் எதிராக அஜித் ரசிகர்கள் உருவாக்கிய போட்டி ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட்டானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இன்றோ #HBDvijay_THALAfans என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக் மாலையில் இந்தியளவில் ட்ரெண்ட்டானது. தற்போது 'பிகில்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால், இந்த ஹேஷ்டேக் இந்தியளவிலான ட்ரெண்ட்டிங்கிலிருந்து கீழே இறங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago