நிஜத்தில் அல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை: விஜய் ஆண்டனி

By ஸ்கிரீனன்

நிஜத்தில் அல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

ஆன்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலைகாரன்'. தியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தனஞ்ஜெயன் வெளியிடவுள்ளார்.

முதலில் ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது ஜூன் 7-ம் தேதி வெளியீட்டுக்கு மாற்றியுள்ளனர். 'கொலைகாரன்' படத்தை விளம்பரப்படுத்த விஜய் ஆண்டனி அளித்துள்ள பேட்டியில் “பொதுமக்களால் எளிதில் தங்களையும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.

நிஜத்தில் எல்லோருக்கும் நிறைய பிரச்சினைகள், சுமைகள் உள்ளன. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அது எனது கதாபாத்திரங்களில், திரையில் எனது ஆளுமையில் பிரதிபலிக்கிறது. நான் திரையில் நிஜத்தில் அல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை. அது யதார்த்தம் கிடையாது.

ஒருவேளை சில வருடங்கள் கழித்து நான் சற்று என் கொள்கைகளை தளர்த்திக் கொண்டு திரையிலும் மகிழ்ச்சியாகத் தோன்றுவேன். ஆனால் எனது இப்போதைய மனநிலை என்னைத் தீவிரமான கதாபாத்திரங்களின் பக்கம் தான் செலுத்துகிறது.

எனது படங்களில் ஹீரோயிசம், சண்டைக் காட்சிகள் இருந்தாலும் அதை பொதுமக்கள் தங்களுடன் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என அது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்வேன்” என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்