சீனாவில் 2.0 வெளியீட்டு தேதி அறிவிப்பு

By ஸ்கிரீனன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படம் சீனாவில் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான '2.0' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலைக் குவித்து சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

இந்தியப் படங்களுக்கென சீனாவில் தனி மவுசு உருவாகி வருவதால் தொடர்ந்து பல இந்தியப் படங்கள் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது பீஜிங்கை சார்ந்த மிகப்பெரிய திரைப்பட விநியோக நிறுவனமான ஹெச்.ஒய் மீடியாவுடன் இணைந்து, லைகா நிறுவனம் '2.0' படத்தை சீனாவில் கிட்டத்தட்ட 10,000 திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டது.

மே மாதத்திலேயே வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது. ஆனால், திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. தற்போது அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டதால் ஜூலை 12-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

சீனப் பதிப்புக்கு  'பாலிவுட் ரோபோட் 2.0: ரிசர்ஜன்ஸ்' (Bollywood Robot 2.0: Resurgence) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'தங்கல்', 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' படங்களைப் போல '2.0'வும் சீனாவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்