சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் 'முஃப்தி' தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு கர்நாடகாவில் தொடங்கப்பட்டுள்ளது.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து ஹன்சிகாவின் 50-வது படமான 'மஹா'வில் நடித்து வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து 'மாநாடு', 'முஃப்தி' தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில் எந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது கர்நாடகாவில் 'முஃப்தி' ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பூஜையுடன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
'முஃப்தி' ரீமேக்கில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக்கும், ஷிவ ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளனர். 'முஃப்தி' இயக்குநரான நார்தனே தமிழிலும் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கன்னடத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதனை மட்டும் தமிழில் கொஞ்சம் குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு ஜூன் 25-ம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது. இதில் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago