'கண்ணை நம்பாதே' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பூமிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அருள்நிதி, மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாறன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.
இதனைத் தொடர்ந்து தற்போது 'கண்ணை நம்பாதே' படத்தை இயக்கி வருகிறார் மாறன். இதில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் பூமிகா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் பணிகளில் உதயநிதி இருந்ததால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிலகாலம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்பணிகள் முடிவடைந்து, மீண்டும் உதயநிதி நடிக்கத் தொடங்கியுள்ளதால் 'கண்ணை நம்பாதே' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
'கண்ணை நம்பாதே' படப்பிடிப்புக்கு இடையே, 'சைக்கோ' படத்தின் டப்பிங் பணிகளையும் தொடங்க முடிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago