விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை விஜய் மில்டன் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கொலைகாரன்'. தியா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை தனஞ்ஜெயன் வெளியிட்டார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது.
நீண்ட நாட்கள் கழித்து விஜய் ஆண்டனிக்கு ஒரு ஹிட் படம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி.
இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கவுள்ளார். ஒளிப்பதிவையும் அவரே கவனிக்கவுள்ளார். இதில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago