பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற ஆண்களை அதிகமாக இந்தப் பயணத்தில்தான் சந்தித்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் ஜோதிகா.
‘காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகா நடித்த படம் ‘ராட்சசி’. அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி, விஜே அகல்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஜோதிகா, “இந்தப் படத்தில் நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் மேடம்தான் படப்பிடிப்பில் என் துணை. ஒரு எமோஷன் காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ளோம். அவர் அற்புதமான நடிகை. இதர நாயகிகளுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையவில்லை. பெண்ணோடு ஒரு காட்சியில் நடித்தால், அதன் அனுபவமே புதுமையாக இருக்கும். இப்படத்தில் என்னோடு நடித்த டீச்சர்கள் அனைவருக்குமே நன்றி. அவர்கள் ரொம்ப எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதற்கு ஈடுகொடுத்து நடிப்பதே கடினமாக இருந்தது.
5 ஆண்டுகளுக்கு முன்பு என் பெண்ணுடைய பள்ளி ஆண்டு விழாவில் டீச்சர் ஒருவர் பேசியதை இங்கு கூறலாம் என நினைக்கிறேன். ஏனென்றால், அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், அதை என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். மலையில் உயரமான இடத்துக்கு ஏறிவிட்டு, கீழே நிற்பவர்களைப் பார்ப்பதற்கு பெயர் வெற்றி என இருக்கலாம். அது வாழ்க்கையில் ஒரு சாதனை கிடையாது. எது முக்கியம் என்றால், மலை ஏறும்போது கிடைத்த அனுபவம்தான் அழகாக இருக்க வேண்டும். சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்.
என் இரண்டாவது திரையுலகப் பாதையில், எனக்கு ரொம்பவே அழகான கதைகள் வருகின்றன. நான் அதிலிருந்து சிறந்ததைத் தேர்வு செய்கிறேன். அதுக்கு மேல் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற ஆண்களை அதிகமாக இந்தப் பயணத்தில்தான் சந்தித்திருக்கிறேன். அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போதுதான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய் சாதனையாக நினைக்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago