17 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த மாதவன் - சிம்ரன் ஜோடி

By ஸ்கிரீனன்

17 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாதவன் - சிம்ரன் இணைந்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தில் நடித்துள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படம் தயாராகி வருகிறது. இதில் நம்பி நாராயணனாக நடிப்பது மட்டுமன்றி, இயக்கியும் வருகிறார் மாதவன்.  முதலில் ஆனந்த் மகாதேவனோடு இணைந்து படத்தை இயக்க திட்டமிட்டார் மாதவன். ஆனால் கருத்து வேறுபாடால் மாதவன் மட்டுமே தற்போது இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. இதில் நம்பி நாராயணன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ரன். இதன் மூலம் 17 ஆண்டுகள் கழித்து மாதவன்  - சிம்ரன் ஜோடி இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் மாதவன் - சிம்ரன் இணைந்து நடித்திருந்தார்கள்.

'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படப்பிடிப்பு தளத்தில் மாதவன் - சிம்ரன் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் மாதவன். இந்தப் புகைப்படத்தை வைத்து பலரும் மாதவன் - சிம்ரன் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதில் தன் பணியை இழந்து, சிறைவாசமும் அனுபவித்தார். சமீபத்தில் இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுக்கப்பட்டார். நம்பியின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்