மிரட்டல்: தளபதி 63 குறித்து விவேக்

By ஸ்கிரீனன்

'தளபதி 63' திரைப்படம் முழுமையான மிரட்டல் என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதனால் 'தளபதி 63' என்று அழைத்து வருகிறார்கள்.

2008-ம் ஆண்டில் வெளியான 'குருவி' படத்துக்குப் பிறகு இதில் விஜய்யுடன் நடித்துள்ளார் விவேக். விஜய் - விவேக் கூட்டணி 'குஷி', 'ப்ரியமானவளே', 'பத்ரி', 'ஷாஜகான்' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணிபுரிந்த கூட்டணியாகும்.

'தளபதி 63' படத்தில் விஜய் - விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரசிகர் ஒருவர் விவேக்கின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "உங்களுடைய அடுத்த படம்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விவேக் "விஜய் 63. முழுமையான மிரட்டல்" என்று பதிலளித்துள்ளார்.

இந்த பதில் விஜய் ரசிகர்களைக் குஷியாக்கியுள்ளது. மேலும், "விஜய்63 திரைப்படம் ஒரு முழுமையான மிரட்டல் என விவேக் கூறியுள்ளார்" என ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

'தளபதி 63' படத்தில் வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்

அனைத்து பணிகளையும் முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்