'கரகாட்டக்காரன் 2'-வில் பங்கெடுக்க விரும்பவில்லை என்று ராமராஜன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கரகாட்டக்காரன்'. 1989-ம் ஆண்டு வெளியான இப்படம் அப்போதைய காலகட்டத்தில் வசூல் சாதனை செய்தது.
தற்போது 'கரகாட்டக்காரன்' படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறார் கங்கை அமரன். இதில் 'கரகாட்டக்காரன்' படத்தில் நடித்த சண்முகசுந்தரம், காந்திமதி தவிர்த்து மீதமுள்ள அனைவரையுமே 'கரகாட்டக்காரன் 2'-வில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கங்கை அமரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'கரகாட்டக்காரன்' வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அதை முன்னிட்டு நடிகர் ராமராஜன் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “பல பேர் என்னிடம் 'கரகாட்டக்காரன் 2' யோசனையைப் பேசியிருக்கிறார்கள். அமரன் அண்ணா கூட கடந்த வருடம் இது பற்றி என்னிடம் பேசினார்.
நான் அவரிடம், "இல்லை, இது நடக்காது" என்று கூறிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, 'ஒரு தடவ கரகம் எடுத்தாச்சு, வெச்சாச்சு, ஆடியாச்சு, ஓடியாச்சு'. அதை மறுபடியும் தொட்டால் தேன்கூட்டில் கை வைப்பதைப் போல. நான் அதில் பங்கெடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago