அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதனால் 'தளபதி 63' என்று அழைத்து வருகிறார்கள்.
ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளாகும். அன்றைய தினத்தில் படத்தின் பெயர் கொண்ட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்தில் அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜய். இரட்டை கதாபாத்திரங்களில் விஜய் ஏற்கெனவே நடித்திருந்தாலும், அப்பா - மகன் என்று ஒரே காட்சியில் வருவது போல நடித்ததில்லை. 'தளபதி 63' படத்தில் ஒரே காட்சியில் அப்பா - மகன் இருவரும் வருவது போன்று ஒரு காட்சியை எடுத்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். அனைத்துப் பணிகளையும் முடித்து தீபாவளிக்குப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago