தளபதி 64 பட நாயகிகள் வதந்தி: படக்குழுவினர் காட்டம்

By ஸ்கிரீனன்

'தளபதி 64' பட நாயகிகள் தொடர்பாக வெளியான வதந்திக்கு, படக்குழுவினர் காட்டமாகப் பதிலளித்துள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, இன்னும் பெயரிடப்படவில்லை. 'தளபதி 63' என்று அழைக்கப்பட்டுவரும் இந்தப் படத்தில், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

'தளபதி 63' படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் கூட்டணி இறுதியானது. பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.

இந்நிலையில், விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்தில் த்ரிஷா தான் நாயகி என்று ஒரு தரப்பும், ராஷ்மிகா தான் நாயகி என்று இன்னொரு தரப்பும் தகவலைப் பரப்பியது. இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்தபோது, “லோகேஷ் கனகராஜ் முதலில் 'கைதி' படத்தின் பணிகளை முடிக்க வேண்டும். விஜய் சாரும் அட்லீ படத்தின் பணிகளை முடிக்க வேண்டும். பிறகுதான் இருவரும் உட்கார்ந்து கதையின்படி யார் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேசுவார்கள்.

அதற்கு முன்னதாக, இவர்தான் நாயகி என்றெல்லாம் வரும் செய்திகளில் எவ்வித உண்மையுமே இல்லை. இப்போதைக்கு விஜய் - லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். பிவி கம்பைன்ஸ் தயாரிக்கிறது என்பது மட்டுமே உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்