நிறைய பேருக்கு ஓட்டில்லை; தபால் வாக்குகளில் நம்பிக்கையில்லை: சுவாமி சங்கரதாஸ் அணி குற்றச்சாட்டு

By ஸ்கிரீனன்

நிறைய பேருக்கு ஓட்டில்லை. தபால் வாக்குகளில் நம்பிக்கையில்லை என்று சுவாமி சங்கரதாஸ் அணி குற்றம் சாட்டியுள்ளது.

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன், சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்தவர்கள் பாக்யராஜ், ஐசரி கணேஷ், ஸ்ரீகார்த் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும் போது, “எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நல்லபடியாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதற்கு காவல்துறைக்கு நன்றி. இந்தத் தேர்தலில் எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதில் ஒன்றும் சந்தேகமில்லை.

இரவு 8.30 மணிக்குத் தான் தேர்தல் இடத்தைச் சொன்னார்கள். ஆகையால், அதில் நிறைய அசவுகரியங்கள் இருந்தன. தபால் வாக்குகளில் தான் நிறைய குளறுபடிகள். இன்னும் 2 நாட்கள் இருந்திருந்தால் அனைவரது வாக்குகளும் வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இதெல்லாம் எதிரணிக்குச் சாதகமாக இருந்திருக்கும் என நினைக்கிறோம். தபால் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கையே கிடையாது.

பாண்டவர் அணியைச் சேர்ந்த ப்ரவீன் காந்தி சில பேப்பர்களை எடுத்துக்கொண்டு வாக்குப்பதிவு மையத்துக்குள் செல்ல முற்பட்டார். அதை நாங்கள் தடுத்தோம். இதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். இது எங்களுக்குத் தெரிந்து நடந்தது. இதைப் போல் தெரியாமல் எவ்வளவு நடந்ததோ என்பது இனிமேல் தெரியவரும்.

ஆரம்பித்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீதிபதி பத்மநாபன் பாண்டவர் அணிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அதே போல, நீதிபதியை நிர்பந்திக்கும் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. அப்படியொரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது. அப்படி யாராவது செய்திருந்தால் அதற்கு வருந்துகிறேன், மன்னிப்புக் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

ஆனால், இதற்காக என்னை சங்கத்திலிருந்து நீக்குகிறார்கள் என்றால், அதே சட்டத்தில் 3 செயற்குழுவில் செயலாளர் மற்றும் துணைத்தலைவர் கலந்து கொள்ளாவிட்டால் பதவியில் இருக்கவே முடியாது. அதை யாருமே செய்யவில்லையே. அது செல்லும் என்றாலும் இதுவும் செல்லும்.

நிறையப் பேருக்கு ஓட்டு இல்லாமல் பண்ணிவிட்டார்கள். அது மிகவும் தவறு. கண்டிப்பாக அதை எல்லாம் தட்டிக் கேட்போம்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்