பிக் பாஸ் சீசன் 3: போட்டியாளர்களின் முழுப் பட்டியல்!

By ஸ்கிரீனன்

இன்று (ஜூன் 23) முதல் தொடங்கப்பட்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 3-ல், போட்டியாளர்கள் யார் என்ற முழு விவரம் தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கடந்த இரண்டு வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 2017-ம் ஆண்டு ஆரவ்வும், 2018-ம் ஆண்டு ரித்விகாவும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் 3-வது சீசன் இன்று (ஜூன் 23) முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இம்முறை போட்டியாளர்கள் யார் என்பதில் பலரது பெயர்களும் வெளியாகின. ஆனால், அதிகாரபூர்வ பட்டியலை விஜய் தொலைக்காட்சி எப்போதுமே வெளியிடாது.

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது, ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்தி கமல் வீட்டுக்குள் அனுப்பும் போது தான் யாரெல்லாம் போட்டியாளர்கள் என்பது தெரியும். அதன்படி போட்டியாளர்கள் என்று அறிவிக்கப்பட்டு வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருப்பவர்களின் பட்டியல் இதோ:

1. பாத்திமா பாபு

2. லாஸ்லியா

3. சாக்சி அகர்வால்

4. மதுமிதா

5. கவின்

6. அபிராமி

7. சரவணன்

8. வனிதா விஜய்குமார்

9. சேரன்

10. ஷெரின்

11. மோகன் வைத்யா

12. தர்ஷன்

13. சாண்டி

14. முகென் ராவ்

15. ரேஷ்மா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்