கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடித்து வந்த ‘நடிகையர் திலகம்’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளது.
‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்படும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிவரும் இந்தப் படத்தை, நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இது உருவாகி வருகிறது.
சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும், பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். மேலும், நாக சைதன்யா, ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு சமந்தாவின் போர்ஷன் முடிந்த நிலையில், நேற்றுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மே மாதம் 9 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago