அட்வைஸ் பண்ணலாமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது- திரையரங்கு பார்க்கிங் கட்டணம் குறித்து அபிராமி ராமநாதன் பதில்

By சி.காவேரி மாணிக்கம்

திரையரங்கு பார்க்கிங் கட்டணம் குறித்த கேள்விக்கு, ‘அட்வைஸ் பண்ணலாமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது’ என அபிராமி ராமநாதன் பதில் அளித்துள்ளார்.

திரையரங்கில் பார்க்கிங் கட்டணமாக எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று கடந்த வருடம் நவம்பர் 30 ஆம் தேதி தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. ஆனால், 4 மாதங்களுக்கு மேலாகியும் பல திரையரங்குகள் இதைப் பின்பற்றாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூலித்து வருகின்றன.

இதுகுறித்து நேற்று ‘தி இந்து’வில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரையைப் படிக்க: சென்னை திரையரங்குகளில் தொடரும் பார்க்கிங் கட்டணக் கொள்ளை: காற்றில் பறக்க விடப்பட்ட அரசு உத்தரவு

இந்நிலையில், சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனிடம், ‘அரசின் விதியை மீறி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று கேட்டோம்.

“சங்க உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. வேண்டுமானால் அட்வைஸ் பண்ணலாம். இன்று மாலை நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்துப் பேசுகிறேன்” என்றார் அபிராமி ராமநாதன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்