தங்கள் உதவியாளர்களின் முழு சம்பளத்தையும் தாங்களே தருவதாக சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சினிமாத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து, சினிமாவில் உள்ள மற்ற துறைகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். அந்த வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நேற்று ஆலோசனை நடைபெற்றது.
இதில், நடிகர்களின் உதவியாளர்களுக்கு இனிமேல் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட நடிகர்களே வழங்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
‘முழு சம்பளத்தையும் நானே வழங்குகிறேன்’ என சூர்யா தெரிவித்தார். உடனே கார்த்தி மற்றும் விஷாலும் இதைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தனர். இதனால், ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் வரை தயாரிப்பாளர்களுக்கு மிச்சமாகும் எனத் தெரிகிறது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், “மற்ற நடிகர்களும் இதைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago