'ஐ' படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் இசையினை மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
விக்ரம், ஏமி ஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் 'ஐ' படத்தினை ஷங்கர் இயக்கி இருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
எப்போதுமே தனது பிரம்மாண்டமான தயாரிப்பு படங்களின் இசையை, பெரிய நடிகர்களை வைத்து, மிகப் பிரம்மாண்டமாக இசை வெளியீடு நடத்துவார். கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசையினை ஜாக்கி சான் வெளியிட பிரம்மாண்டாக இசை வெளியீடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது 'ஐ' படத்தினை இந்திய அளவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டை உலக அளவில் முன்னணி நடிகரை அழைத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார். சிறப்பு விருந்தினர் ஒதுக்கும் தேதிகளைப் பொறுத்து விழா ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். விழா மே மாத இறுதியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.அதுமட்டுமன்றி, 'ஐ' படத்தினை 16 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்
தனது தயாரிப்பு படங்களின் இசை வெளியீட்டு விழா எவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்றாலும் அதில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago