‘தளபதி 62’ அரசியல் படமா?

By அபராசிதன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் அரசியல் சார்ந்ததாக இருக்கலாம் என்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். விஜய்யின் 62வது படமான இதை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தொடங்கியது. இரண்டாவது ஷெட்யூல் கொல்கத்தாவிலும், மூன்றாவது ஷெட்யூல் சென்னையின் சில கல்லூரிகளிலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில காட்சிகள் மற்றும் பாடல்களை அமெரிக்காவில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம், அரசியல் சார்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம், அரசியல்வாதியான பழ.கருப்பையா, படத்திலும் அரசியல்வாதியாகவே நடிக்கிறாராம். கட்சித் தலைவராக அவர் நடிக்க, அந்தக் கட்சியில் முக்கிய பதவி வகிப்பவராக ராதாரவி நடிக்கிறார் என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்