முதலில் பிக் பாஸ் 3, பின்பு இந்தியன் 2: கமல் திட்டம்

By ஸ்கிரீனன்

முதலில் 'பிக் பாஸ் 3' பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, பின்பு 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்த கமல் திட்டமிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'இந்தியன் 2'. முதற்கட்ட படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்ட இப்படம் மீண்டும் எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் இருந்தது.

கமலும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம், இடைத்தேர்தல் பிரச்சாரம் என மும்முரமானதால், படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. கமலுக்கு மேக்கப் அலர்ஜி, பட்ஜெட் அதிகம் என பல பிரச்சினைகள் படத்தைச் சுற்றியது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்க பேச்சுவார்த்தை மட்டும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

படத்தை கைமாற்ற ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகியவற்றிலும் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். ஆனால், இறுதியாக லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதனால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

தற்போது கமலோ 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டார். இதனால், படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என தகவல் வெளியானது. ஆனால், கமல் இல்லாமல் இதர காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஷங்கர்.

'பிக் பாஸ் 3' நிகழ்ச்சி முடிந்தவுடன், முழுமையாக 'இந்தியன் 2' படத்துக்கு மட்டுமே தேதிகள் கொடுத்துள்ளார் கமல். 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்கு இடையே சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் மட்டும் அவ்வப்போது கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

ஜூன் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்