ஜோதிகாவின் ராட்சசி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By ஸ்கிரீனன்

கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

'செக்கச்சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜோதிகா. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.

இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இயங்கிவந்த படக்குழு, தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 'ராட்சசி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர், இன்று (மே 31) மாலை வெளியிடப்படவுள்ளது.

பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் காலகட்டம் என்பதால், இந்தப் படத்தையும் ஜூனிலேயே வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் துவங்கவுள்ளது.

'ராட்சசி' படத்தை முடித்துவிட்டு, 'ஜாக்பாட்' படத்தில் நடித்து வந்தார் ஜோதிகா. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்