கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் படம்: தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பம்

By ஸ்கிரீனன்

'கான்ட்ராக்டர் நேசமணி' தலைப்பில் படம் எடுப்பதற்கு அனுமதி கேட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பம் தரப்பட்டுள்ளது.

‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ‘இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?’ எனக் கேட்டது.

மே 27-ம் தேதி இப்பதிவு வெளியானதும், பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அதில், விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் கான்ட்ராக்டர்  நேசமணி தலை மீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்” என்று கருத்திட்டார்.

உடனே, “அவர் எப்படியிருக்கிறார்?” என மற்றொருவர் கேட்க, “அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்துவிட்டனர்” என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து, ‘அவருக்காகப் பிரார்த்திப்போம்’ என ஃபேஸ்புக் பக்கத்தில் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இந்த ஹேஷ்டேக் பிரபலமாக, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் நேசமணிக்கான பிரார்த்தனைக் கருத்துகள் இடப்பட்டன.

கான்ட்ராக்டர்  நேசமணி என்ற கதாபாத்திரத்தின் பெயர் பெரும் வைரலாகி வருவதால், திருப்பூரில் உள்ள பல்வேறு டி-ஷர்ட் நிறுவனங்களில் நேசமணி உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகளுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

உலக அளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற பெயர் ட்ரண்டாகிவிட்டதால், அதைவைத்துப் படம் எடுக்கவும் முடிவு செய்துவிட்டனர். 'கான்ட்ராக்டர் நேசமணி' என்ற தலைப்புக்கு அனுமதி கேட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தது யார்? என்ற தகவலை தயாரிப்பாளர் சங்கம் வெளியிடவில்லை.

இது தொடர்பாக இயக்குநர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற பெயரில் ஒரு டைட்டில் ரெஜிஸ்டர் ஆகியுள்ளதாக செய்தி. இதைக் கணித்து நேற்றே ட்வீட் செய்தேன்.வாழ்த்துகள், அந்தத் தயாரிப்பாளருக்கு. #Pray_for_Neasamani” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்