வைரலாகும் ஜெயம் ரவியின் ‘கோமாளி’ லுக்: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து

By ஸ்கிரீனன்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’ படத்தின் 9-வது லுக்குக்காக, திரையுலகப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

’அடங்க மறு’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கத் தொடங்கிய படம் 'கோமாளி'. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில், ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ளார். இதனை வித்தியாசமாக விளம்பரப்படுத்த, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லுக்கை வெளியிட்டு வந்தது படக்குழு.

இதில், வித்தியாசமான ஜெயம் ரவியின் 9-வது லுக்கை, அவரது அண்ணனும் இயக்குநருமாகிய மோகன் ராஜா வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி நேற்று (மே 26) மாலை 4 மணியளவில் 9-வது லுக் வெளியிடப்பட்டது.

ஜெயம் ரவி முழுமையாக உடல் எடையைக் குறைத்து, பள்ளி மாணவனாக இருப்பது போல் அந்த லுக் அமைந்திருந்தது. சுமார் 20 கிலோ வரை எடையைக் குறைத்து இந்த லுக்கில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இதற்கு குஷ்பு, விக்ராந்த், ஜெனிலியா, இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், இயக்குநர் கார்த்திக் தங்கவேல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'கோமாளி' படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளனர். பாலிவுட் நடிகை கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து, ஆகஸ்ட்டில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்