சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். அதற்காக கதைகள் கேட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்.ஜி.கே' படம் வரும் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை ட்ரீம் வாரியர் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'காப்பான்' வெளியாகவுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது தனது நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'சூரரைப் போற்று' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கி வரும் இந்தப் படத்தின் தொடர் படப்பிடிப்பு, 'என்.ஜி.கே' வெளியீட்டுக்குப் பிறகு தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில் 'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் கொடுத்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தை முதலில் ஹரி இயக்குவதாக இருந்தது. ஆனால் அனைவருக்கும் பிடித்த மாதிரி கதை அமையாத காரணத்தால், சன் பிக்சர்ஸ் - சூர்யா படத்தை ஹரி இயக்கவில்லை. தன் கதையில் நடிக்க வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டார் ஹரி.
தற்போது, சூர்யா கொடுத்த கால்ஷீட்டுக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்கும் படலத்தைத் தொடங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். இதில் சில புதுமுக இயக்குநர்கள், ஒரு பட இயக்குநர்கள் என பலரும் கதைகள் கூறி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எந்தக் கதை பிடிக்கிறதோ, அதை சூர்யாவுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள். விரைவில் யார் இயக்குநர் என்பது தெரியவரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago