விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிக்கவுள்ள படத்துக்கு 'இராவணகோட்டம்' என பெயர் வைத்திருக்கிறார்கள்.
2013-ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் 'மதயானைக் கூட்டம்'. விமர்சன ரீதியாக பலரும் கொண்டாடிய படம். ஆனால் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கதிர், ஓவியா, கலையரசன், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.
'மதயானைக் கூட்டம்' படம் வெளியாகி சுமார் 6 ஆண்டுகள் கழித்து தன் அடுத்த படத்தைத் துவங்கியுள்ளார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். இதில் நாயகனாக நடிக்க சாந்தனு ஒப்பந்தமாகியுள்ளார். தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்துக்கு 'இராவணகோட்டம்' என்று தலைப்பிட்டுள்ளனர்.
'இராவணகோட்டம்' படம் இயக்கவுள்ளது குறித்து இயக்குநர் விக்ரம் சுகுமாரன், “'மதயானைக் கூட்டம்' வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்கு கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை.
தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன். சாந்தனு பாக்யராஜ் அவரது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு தயாராக மிகவும் கடுமையாக உழைப்பவர். அவர் இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருக்கிறார். மேலும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கில் தான் உரையாடுகிறார். 'இராவணகோட்டம்' படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
நாயகனை போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியை தேடி வருகிறோம். அப்பாவித்தனம் மற்றும் குருட்டு தைரியம் கலவையாக கொண்ட ஒரு குணாதிசயம் தான் நாயகியினுடையது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது" என்றார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago