‘’என்னை தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் சார். ஒரு குழந்தைக்கு சொல்லுவது போல, கதை சொல்லுவார்’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் நடிகர் மோகன்.
இயக்குநர் மகேந்திரன் சமீபத்தில் காலமானார். அவருக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்ப்பில், இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் நடிகர் மோகன் கலந்துகொண்டு பேசியதாவது:
‘’மிகச்சிறந்த படைப்பாளி மகேந்திரன் சார். பிரமாதமான ரைட்டர். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்... அவரைப் பார்த்து நான் ரொம்பவே ஆச்சரியப்படும் விஷயம்... இத்தனை சினிமாக்களில் பணியாற்றியிருந்தாலும் இத்தனைப் படங்கள் கொடுத்திருந்தாலும், அவர் கடைசி வரை சினிமாக்காரராக இல்லாமல்தான் வாழ்ந்தார். அதுதான் மகேந்திரன் சார் ஸ்டைல்.
அவருடைய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’ என எல்லாப் படங்களுமே தனித்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொருவிதமாக அணுகியிருப்பார்.
இயக்குநர் பாலசந்தர், கமலை வைத்து ‘மரோசரித்ரா’ படத்தை தெலுங்கில் எடுத்திருந்தார். இந்தப் படத்தை தமிழில் எடுக்க முடிவுசெய்த பாலசந்தர் அவர்கள், கமல் சார் நடித்த ரோலில் என்னை நடிக்கவைக்க ஓகே செய்திருந்தார். ‘அலைகள் எழுதிய கவிதை’ என்கிற அந்தப் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது.
ஆனால், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சுதாகர் கேரக்டரில் நடித்தேன். அதற்காக, மொட்டை அடித்திருந்தேன். எனவே படப்பிடிப்பு ஆறேழு மாதங்கள் தள்ளிக்கொண்டே போனது. இந்தசமயத்தில், ‘மரோசரித்ரா’ திரைப்படம், சென்னையிலும் தமிழகத்திலும் தெலுங்கிலேயே ரிலீஸ் செய்யப்பட்டது. மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது. இதனால், படத்தை ரீமேக் செய்யும் முடிவை மாற்றிக்கொண்டார் பாலசந்தர் சார்.
அந்த சமயத்தில்தான், அனந்து அவர்கள், மகேந்திரனிடம் என்னைச் சொல்லி, வாய்ப்பு வழங்கும்படிக் கேட்டார். அப்படிக் கிடைத்ததுதான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்பட வாய்ப்பு. என்னை தமிழில் முதன்முதலில் ஹீரோவாக்கியவர் மகேந்திரன் சார்தான்.
மகேந்திரன் சார், நடிப்பு சொல்லிக்கொடுக்கமாட்டார் என்று சொன்னார்கள். ஆனால் அவர் கதை சொல்லும்போதே நடிப்பு, உணர்ச்சி, முகபாவம் எல்லாமே வந்துவிடும். ஒரு குழந்தைக்குச் சொல்வது போல், கதையை விவரிப்பார். அவர் விவரிக்கும் ஸ்டைலே அவ்வளவு அழகாக, உணர்வுபூர்வமாக இருக்கும். மிகப்பெரிய திரைமேதை மகேந்திரன் சார்.
‘பருவமே’ பாடல், ஜாக்கிங் ஓடிக்கொண்டே எடுக்கப்பட்ட பாடல். நானும் சுஹாசினியும் மட்டும் ஓடவில்லை. எல்லோருமே ஓடினோம். நைட் 10 மணி வரை படப்பிடிப்பு. பிறகு அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் ரெடியாகி, சாலைக்கு வந்துவிடுவோம். நாலுமணிக்கெல்லாம் ஓடுவோம். அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் முடித்துவிடுவோம். மகேந்திரன் சார், கேமிராமேன், உதவியாளர்கள் எனப் பலரும் ஓடிஓடி படப்படிப்பு நடத்தியதும், அப்போது எங்களுடன் அவர் பலவிஷயங்களைப் பேசியதும் என்றைக்குமே மறக்கமுடியாது.
இவ்வாறு நடிகர் மோகன் பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago