விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டார்.
திறமையான பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்றது.
கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 20-ம் தேதி இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பானது. 53 எபிசோடுகளுக்குப் பிறகு நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது.
கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது, 21 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, சிங்கப்பூரில் இருந்து சூர்யா, கனடாவில் (இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்) இருந்து சின்மயி என உலக அளவில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த 21 பேரில் இருந்து ரித்திக், அனுஷ்யா, சின்மயி, பூவையார் என 4 பேர் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட, வைல்ட் கார்ட் சுற்று மூலம் சூர்யா மற்றும் அஹானா இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிரபல பின்னணிப் பாடகர்களான ஷங்கர் மஹாதேவன், சித்ரா, எஸ்.பி.பி.சரண், கல்பனா ஆகிய 4 பேரும் நடுவர்களாக இருந்து இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று மாலை 3 மணிக்குத் தொடங்கி மிகப் பிரமாண்டமாக இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியாளர்களான 6 பேரில் இருந்து, ரித்திக் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாமிடத்தை சிங்கப்பூர் சூர்யா பெற்றார். அவருக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாமிடம் பெற்ற பூவையாருக்கு, 10 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
விரைவில் ‘சூப்பர் சிங்கர் சீனியர் 7’ ஒளிபரப்பாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago