‘2.0’ படத்தில் அக்‌ஷய் குமாருக்காக இயக்குநர் மகேந்திரன் டப்பிங் பேசியதைப் பயன்படுத்த முடியவில்லை: இயக்குநர் ஷங்கர்

By ஸ்கிரீனன்

’2.0’ படத்துக்காக இயக்குநர் மகேந்திரன் செய்த டப்பிங் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் இயக்குநர் ஷங்கர்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் ஷங்கர் பேசியதாவது:

''ஒரு சில படங்கள் பார்த்து முடிந்தவுடன் 2, 3 நாட்களுக்கு மனதிற்குள்ளே இருக்கும். இயக்குநர் மகேந்திரன் சாருடைய படங்கள் வருடக்கணக்காக மனதிற்குள்ளே இருக்கின்றன. ரொம்ப நல்ல மனிதர். அவர் இல்லாதது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது.

'2.0' படத்தில் அக்‌ஷய் குமார் கதாபாத்திரத்துக்காக அவரிடம் டப்பிங் பேச வேண்டும் என்று கேட்டேன். யோசிக்கவே இல்லை, ‘நான் பண்ணித் தருகிறேன்’ என்று உடனே வந்தார். ஆனால், அதைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது''.

இவ்வாறு இயக்குநர் ஷங்கர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்