தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கும் படம் 'மாளிகை'. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் கலந்து கொண்டு பேசும்போது நடிகை கஸ்தூரியை லேசாக கிண்டலடித்தார்.
கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:
''தில் சத்யா என்னிடம் வந்து கதை சொல்லும் போது வித்தியாசமாக இருந்தது. இப்போது நான் ஒரு 7-8 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆக்டிங்ல பிஸியா இருக்கேன். ஆனால் இதுல எல்லாப் படமுமே புதிய இயக்குநர்கள்தான். அது அப்படித்தான் அமைஞ்சுது.
ஏன்னா நிறைய கதைகள் கேட்கும்போது புது இயக்குநர்கள் கிட்டேருந்து ஏதாவது வித்தியாசமான லைன் வருது. அது மாதிரிதான் தில் சத்யா வந்தாரு. அவுட்லைன் மட்டும் சொல்லுங்க, என் கேரக்டர் பற்றி சொல்லுங்கன்னேன்.
ஆனால், இந்தப் படத்துல நடிக்கறதுக்குக் காரணம் ராம்சிங். ஏற்கெனவே அவர் கஸ்தூரியையே அழகா காண்பிச்சாருக்கார்னா பாருங்க... இல்ல 20 வருஷம் முன்னாடி, இப்பவும் அழகாத்தான் இருக்கம்மா. காரணம் இவருடைய சீஃப் அசோக் ராஜன், இவர் வந்து எல்லாரையுமே அழகாகக் காட்டக்கூடிய ஒரு திறமை படைத்தவர். என்னோட 2-வது படத்துல இருந்து கேமரா டிப்பார்ட்மென்ட்டில் இருக்கறவர்.
அவர்தான் எங்கிட்ட வந்து நீங்க எப்படியாவது இந்த கேரக்டர்ல நடிக்கணும். நான் இந்தப் படத்துல கமிஷனர். சினிமாலதான் ஒரு நாள் கமிஷனர், ஒருநாள் ஜட்ஜு, ஒருநாள் அரசியல்வாதி அப்படியிருக்க முடியும்''.
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago