இந்த விதிகள் ஏன் தமிழ்ப் படத்துக்கு இல்லை? - விஷால் கேள்வி

By ஸ்கிரீனன்

ஹாலிவுட் படங்களுக்கு மட்டும் விதிக்கப்படும் விதிகள் தொடர்பாக திரையரங்கு உரிமையாளரைச் சாடியுள்ளார் விஷால்.

2009-ம் ஆண்டு தொடங்கிய மார்வல் சினிமா டிக் உலகத்தின் கதை 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' வெளியாகி 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியே 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'.

இந்தியாவில் இன்று (ஏப்ரல் 26) வெளியாகியுள்ள இப்படம் டிக்கெட் முன்பதிவிலேயே சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தில் டிக்கெட் முன்பதிவில் 'பாகுபலி 2', '2.0' ஆகிய படங்களுக்குப் பிறகு 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' இடம் பெற்றுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பல்வேறு திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பல்வேறு ட்விஸ்ட்கள் இருப்பதால் திரையரங்கிற்குள் யாரும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிரக்கூடாது என்று வெற்றி திரையரங்கு உரிமையாளர் ராகேஷ் தெரிவித்தார். போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, படத்தை ரசியுங்கள். அதைவிடுத்து சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பகிராதீர்கள் என்றும் குறிப்பிட்டார்.

இப்பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தனது ட்விட்டர் பதிவில், "ஆண்டுக்கு ஒரு முறையே வரும் ஆங்கிலப் படத்துக்கு இருக்கும் இத்தகைய அறிவிப்பு வாராவாரம் வந்து குவியும் தமிழ்ப்படங்களுக்கும் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடியாக, ''சினிமாவுக்கு எப்போதுமே துணையாக இருக்கிறோம். பைரசியை ஊக்குவிப்பதில்லை. எங்களுக்கு மொழி ஒரு தடையில்லை'' என்று திரையரங்கு உரிமையாளர் ராகேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்