தோனியின் அபார ஆட்டம்: திரையுலக பிரபலங்கள் பாராட்டு

By ஸ்கிரீனன்

நேற்றைய (ஏப்ரல் 21) ஐபிஎல் போட்டியில் தோனியின் அபார ஆட்டத்துக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 39-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் பெங்களூரு கேப்டன் கோலிக்கு கிலி காட்டியது, காட்டியவர் தோனி, ஆனால் கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆட்டத்தை ஆர்சிபிக்கு விட்டுக் கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த ஆட்டத்தில் தோனியின் அபார ஆட்டத்தை சமூகவலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள். அவற்றில், தோனியின் ஆட்டம் குறித்து தமிழ் திரையுலக பிரபலங்கள் பகிர்ந்த பாராட்டுகளின் தொகுப்பு இதோ:

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு: இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய வெற்றிகளையும் மரியாதையையும் பெற்றுத் தந்த ஒருவர் தனது விண்டேஜ் பாணியை மீண்டும் கண்டறிந்துள்ளார். வாணவேடிக்கை காட்டியிருக்கிறார். அதிகம் நம்பகத்தன்மையுள்ள கிரிக்கெட் வீரர். தல தோனி. தலை வணங்குகிறேன்.

காயத்ரி ரகுராம்: தோனி மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை இன்று வென்றுவிட்டார். தன்னிகரில்லாத ஒருவர் அசாத்திய துரத்தல்.

சித்தார்த்: தோனி போன்ற ஒரு கிரிக்கெட் அதிசயம் இருந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. போட்டி முடிவு முக்கியமல்ல. புள்ளிகள் முக்கியமல்ல. தோனிக்கு இது மிகப்பெரிய வெற்றி. அவரது அமைதிதான் அவரின் அற்புத சக்தி. உங்களை வணங்குகிறேன் சூப்பர்மேன். கிரிக்கெட்டை நிரந்தரமாக மாற்றிவிட்டீர்கள்.

அறிவழகன்:  வல்லினம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை எழுதும்போது எனது முதல் விருப்பம், நாயகனின் அணி இறுதிப் போட்டியில் தோற்க வேண்டும் அது ரசிகர்களுக்கு திருப்திகரமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் சில காரணங்களால் அப்படி எழுதவில்லை. ஆனால் இன்று தனி நபர் ராணுவமான தோனி, தோற்றாலும் வெற்றிதான் என்பதற்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார். அணித்தலைவர் என்பதற்கும், சகாப்தம் என்பதற்குமான வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். எதிரிகள் உங்களைக் கண்டு பயந்தால் அது வெற்றியே. தோனி எப்போதும் வாழ்க்கைக்கும், வெற்றிக்குமான பாடம்.

சதீஷ்: பரவாயில்லை. உங்கள் ஆட்டத்தை இப்படி பார்த்ததே போதும் தல தோனி. நீங்கள் வேற லெவல். லவ் யூ.

இயக்குநர் ரத்னகுமார்: தோனி பந்தை மைதானத்துக்கு வெளியே தூக்கி அடிக்கும்போது, உங்களில் எத்தனை பேர், இதுக்கு மேல் தோற்றாலும் பரவாயில்லை என்று நினைத்தீர்கள்? அதுதான் சிஎஸ்கே. அதுதான் தோனி - கிரிக்கெட் ஆசான்.

வாசுகி பாஸ்கர்: உங்களை இன்னும் விரும்புகிறோம் சிஎஸ்கே. நல்ல போராட்டம். தோனி அற்புதம்.

கஸ்தூரி: கோலியின் அணி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. சிஎஸ்கே, கடந்த இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தோற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நாக் அவுட் சுற்றில் அனைத்தையும் வெல்ல வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

தமன்: தோனி, வாழ்க்கை முழுவதும் தலை வணங்குகிறேன்.

சுசீந்திரன்: தோனி -  தலைசிறந்த ஆட்டம்.

ஆதவ் கண்ணதாசன்: என்ன ஒரு ஆட்டம். உங்களுக்கு என் வணக்கங்கள் தோனி. என்னே ஒரு வீரர், என்னே ஒரு மனிதர், என்னே ஒரு தலைவர்!!!

பாவனா பாலகிருஷ்ணன்: தோனி. என்னே ஒரு வீரமான ஆட்டம். தனியாக நின்று முழு முயற்சியைத் தந்தார். மிகச் சிறப்பான ஆட்டம். சென்னை அணிக்கு வலியைத் தரும் தோல்வி. தோனியைப் போல இன்னொருவர் வர முடியுமா? உங்களுக்கு என் அளவுகடந்த அன்பும், மரியாதையும். வாழ்த்துகள் பெங்களூர் அணி. இன்று நன்றாக ஆடினீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்