ஏப்ரல் 28-ல் கூடுகிறது நடிகர் சங்க செயற்குழு: தேர்தல் குறித்து விவாதிக்க முடிவு

By ஸ்கிரீனன்

நாளை (ஏப்ரல் 28) நடிகர் சங்க செயற்குழு கூடவுள்ளது. இதில், தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2015-ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. பொதுவாக, நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாசர் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவு பெற்றது.

ஆனால், நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகளை முடித்துவிட்டுத்தான் தேர்தல் குறித்த அறிவிப்பு இருக்கும் என்று தெரிவித்தனர். அதன்படி, 6 மாத காலம் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிவு பெற்றுள்ளதால், ஜூன் மாதம் நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்த ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்தத் தேதியை முடிவு செய்வதற்கான, நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை (ஏப்ரல் 28) நடைபெறவுள்ளது. இக்கூட்டம், நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. இதில், நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், எங்கு தேர்தல் நடத்தலாம் உள்ளிட்ட அனைத்தையுமே முடிவுசெய்து அறிவிக்கவுள்ளனர்.

இந்தத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த அணிக்குப் போட்டியாக, ராதாரவி தலைமையிலான அணி களமிறங்கவும் தீர்மானித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்