என்னை அறிமுகப்படுத்திய குரு மகேந்திரன் சார்’’  - சின்னி ஜெயந்த் உருக்கம்

By வி. ராம்ஜி

''என்னை அறிமுகப்படுத்திய குரு, மகேந்திரன் சார். அவர்தான் என்னையும் என் நடிப்புத்திறனையும் வெளியே கொண்டுவந்தார்’’ என்று உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டார் நடிகர் சின்னிஜெயந்த்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு நினைவாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் நடிகர் சின்னிஜெயந்த் கலந்துகொண்டு பேசியதாவது:

சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையுடன் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தேன். ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கவில்லை. என்னுடைய ஆசையும் நிறைவேறவில்லை.

அந்த சமயத்தில்தான், இயக்குநர் மகேந்திரன் சாரைச் சந்தித்தேன். எனக்குள் இருக்கிற திறமையை எனக்கே அடையாளம் காட்டினார் அவர். ‘கைகொடுக்கும் கை’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார்.

என் வாழ்க்கையில், எனக்கு குருவாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார் மகேந்திரன் சார். ‘கைகொடுக்கும் கை’ எனக்கு முதல்படம். அப்படி முதல்படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்பையும் தந்தார். அதுமட்டுமா? ரஜினி படத்தில் காமெடி பண்ணுகிறவர்களுக்கு, தனியே பாட்டெல்லாம் இருக்காது. ரஜினி என்றில்லை, பெரிய நடிகர்களின் படங்களில், அதற்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. ஆனால், ‘கைகொடுக்கும் கை’ படத்தில், முதன்முதலாக நான் அறிமுகமான படத்தில், எனக்கு ஒரு பாட்டு கொடுத்திருந்தார் மகேந்திரன் சார். அந்தப் பாடல் இன்னும் என்னை புகழுக்குக் கொண்டுசென்றது. குருநாதர் மகேந்திரன் சாரை நான் வாழ்நாள் முழுக்கவே மறக்கமாட்டேன். அவரின் மறைவு என்னை ரொம்பவே கலங்கச்செய்தது.

இவ்வாறு சின்னி ஜெயந்த் பேசினார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்