தோனி மைதானத்துக்குள் வந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் விக்ரம் பிரபு காட்டமாகப் பதிவிட்டுள்ளார்
12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது. இப்போட்டியின் கடைசி ஓவரில் நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் வந்து ஏன் நோ பாலை ரத்து செய்தீர்கள்? என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனியின் செயல் குறித்து ஏற்கெனவே பல்வேறு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் சிறிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க. அப்ப யாரை விட்டு வைப்பாங்க? தவறு செய்ததற்கான அத்தாட்சியாக காணொலி இருக்கிறது. அது போதாது. ஆனால் அந்தத் தவறைத் தட்டிக் கேட்ட விதம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் இந்த ஒட்டுமொத்த அமைப்புமே தவறில்லையா? எனது தலைவனை (இந்தியா/சிஎஸ்கே) விட்டுவிடுங்கள். ஒரு விளையாட்டை, நாட்டை இதை வைத்து மதிப்பிடாதீர்கள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்'' என்று விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago