கைதட்டலுக்காக கொச்சையான பேச்சுகளைப் பேசி வருகிறார் ராதாரவி என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கமும் ராதாரவியைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
''சமீபத்தில் நடைபெற்ற 'கொலையுதிர் காலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகில் மூத்த கலைஞரான நடிகர் ராதாரவி அத்திரைப்படத்தின் கதாநாயகியான நயன்தாராவை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியும் மேலும் மற்ற நடிகைகளையும் கொச்சைப்படுத்துவது போல் ரெட்டை வசன அர்த்ததுடன் பேசியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
ராதாரவி திரைத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தும் சக கலைஞரைத் தகாத வார்த்தைகளால் பேசுவது ஒட்டுமொத்த துறைத்துறைக்கும் மற்ற மூத்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது.
திரைத்துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் ராதாரவி, நகைச்சுவை என்ற பெயரில், கைதட்டலுக்காக இது போன்ற கொச்சையான பேச்சுகளைப் பேசி வருகிறார். அது திரைத்துறை மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் அவரது மேன்மையைக் குறைப்பது மட்டுமல்லாமல் ராதாரவி மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி திரைத்துறையின்மேல் மக்களுக்கு நம்பிக்கையை சீரழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயலுக்காக ராதாரவிக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நடிகர் சங்கம் எடுக்கும் முடிவிற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும்''.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago