புதிய ஸ்டோர்!

By மகராசன் மோகன்

‘விஜய்’ தொலைக்காட்சியில் நான்கு அண்ணன் தம்பிகளைச் சுற்றி நடக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதாபாத்திரங்களைப் போலவே அதில் இடம்பெறும் மளிகை கடையும் பிரதான கதாபாத்திரமாக இருந்து வருகிறது. 

குன்னக்குடி பின்னணியில் நடக்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’  சீரியலில் திருப்பமாக, அடுத்தடுத்த வாரங்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை இருக்கும் இடத்துக்கு எதிராகவே மீனாவின் தந்தை ஜனார்த்தனம் புதிய கடை ஒன்றை நிறுவுவதும், அதன் தொடர்பாக அடுத்து வெடிக்கும் பிரச்சினைகளையும் சுற்றி நகர உள்ளது. 

கட்டுக்கோப்பான கூட்டுக்குடும்பமாக இருந்து நடத்தி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தவிடாமல் செய்ய, மீனாவின் தந்தை ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு வரவேண்டிய மளிகை சாமான்களை அனுப்பாமல் தடுக்கிறார். சொந்தப் பிரச்சினையின் காரணமாக. அதையும் மீறி அவர்கள் கடைக்கான சாமான்களை வெளியில் இருந்து, கொண்டு வருகின்றனர். அப்போதும் ஜனார்த்தனம் சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறார்.  இப்படி உருவாரும் அனைத்து பிரச்சினைகளையும் நான்கு சகோதரர்களும்  ஒற்றுமையாக இருந்து எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான், இனி வரும் வாரங்களின் அத்தியாயமாக ஒளிபரப்பாக உள்ளது. 

இந்தத் தொடரில் மூத்த அண்ணனாக  ‘சரவணன் மீனாட்சி’ வழியே கவனத்தை ஈர்த்த ஸ்டாலினும், நாயகி தனலட்சுமியாக நடிகை சுஜிதாவும் நடிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்