அக்னி தேவி பட சர்ச்சை: பாபி சிம்ஹாவுக்கு ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கம் திட்டம்

By ஸ்கிரீனன்

'அக்னி தேவி' பட சர்ச்சை தொடர்பாக, பாபி சிம்ஹா ஒத்துழைக்க மறுப்பதால் ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அக்னி தேவி'. இப்படத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை தற்போது விஸ்வரூபமாக வெடித்துள்ளது. தயாரிப்பு நிறுவனமும், பாபி சிம்ஹாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இப்பிரச்சினைத் தொடர்பாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாபிசிம்ஹா மற்றும் 'அக்னி தேவி' படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்புக்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், முதலில் படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், பட நஷ்டத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் பாபிசிம்ஹாவை தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியது.

ஆனால், அவரோ எதுக்கும் ஒத்துழைக்க இயலாது. அனைத்தையுமே நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளனர்.

இதில் பாபி சிம்ஹா மீது ரெட் கார்டு போட்டால் என்ன என்று பேசியுள்ளனர். ஏனென்றால், எதுக்குமே ஒத்துழைப்பு இல்லாத போது, நாம் ஏன் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், பண முதலீடு செய்த தயாரிப்பாளரையே ரொம்ப இழிவாக பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்