உன்னைப் போல் ஒருத்தி இல்லயே..! - நயன்தாராவுக்கு மகளிர் தின வாழ்த்துச் சொன்ன விக்னேஷ் சிவன்

By ஸ்கிரீனன்

உன்னைப் போல் ஒருத்தி இல்லயே..! என்று நயன்தாராவுக்கு மகளிர் தின வாழ்த்துச் சொல்லியுள்ளார் விக்னேஷ் சிவன்

'போடா போடி', 'நானும் ரவுடிதான்', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவரும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள்.

அவ்வப் போது வெளிநாடு சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதன் மூலமே இருவருமே நெருங்கிய காதலர்களாக வலம் வருகிறார்கள் என்று வெளியுலகிற்கு தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 8) உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது நயன்தாராவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:

நீ என் உலக அழகியே.. உன்னைப் போல் ஒருத்தி இல்லையே.. இனிய மகளிர் தின வாழ்த்துகள். வலிமையான மகளிர்க்கு. மற்றவர்களைவிட தன் மீதான நம்பிக்கையை அதிகமாகக் கொண்டிருக்கும் பெண்களே, நீங்கள்தான் இந்த சுற்றுச்சூழலை அழகாக மிளிரச் செய்கிறீர்கள். நன்றி. அத்தகைய பெண்கள் மீது அன்புகொண்டு மரியாதை செலுத்தி இந்த உலகை எல்லாப் பெண்களுக்குமான சிறந்த இடமாக ஒன்றிணைந்து மாற்றுவோம்.

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தற்போது நயன்தாரா பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், விரைவில் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்