தலைவி அப்டேட்: ஜெ.வாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம்

By ஸ்கிரீனன்

விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா 'பயோபிக்'கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.

பிப்ரவரி 24-ம் தேதி அன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதாவின் பயோபிக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

மதன் கார்க்கி பாடல்கள் எழுத, விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகவுள்ளது.

இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குநர் விஜய். சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கணா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (மார்ச் 23) கங்கணா ரணாவத்தின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு இச்செய்தியை படக்குழு உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா பயோபிக்கிற்காக, அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லாச் சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்