மீண்டும் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ்

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

நயன்தாரா, கலையரசன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஐரா'. இப்படத்தை சர்ஜுன் இயக்க, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. விமர்சன ரீதியாக படம் சோபிக்கவில்லை என்றாலும், படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' படத்தை தயாரித்து வருகிறது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ். அதையடுத்து புதிதாக விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படமொன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது கே.ஜே.ஆர் நிறுவனம். விரைவில் இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி', 'தர்மதுரை' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர். தொடர்ச்சியாக 4-வது முறையாக இந்த ஜோடி இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE