'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஏன் நடிக்கக் கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை என ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பிரபல செய்தி தொலைக்காட்சியில் பணியில் இருந்தார். அப்பணியிலிருந்து விலகுவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் புதிய கட்சியில் இணைந்து அவர் பணியாற்றப்போகிறார் என செய்திகள் வந்தன. ஆனால் எதையும் ரங்கராஜ் பாண்டே உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ’பிங்க்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்ய முடிவானது. போனி கபூர் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்கத்தில், அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பது இறுதியானது. ஒரு பாலியல் வழக்கை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் எதிர்க்கட்சி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.
இது பற்றி ஒரு கல்வி நிறுவன விழாவில் பேசியுள்ள பாண்டே, "டிவியிலிருந்து வெளியே வந்த பின் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அஜித் படத்தில் நடிக்கக் கேட்டார்கள். அவ்வளவு பேர் நடிக்க இருக்கும்போது ஏன் என்னிடம் கேட்டார்கள் என்று தெரியவில்லை. அது படம் வெளியானதும் தெரியும்.
வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எனது கனவு திரையுலகம் அல்ல. அதற்கு ஆசைப்பட்டு நான் முயற்சிக்கவும் இல்லை. இறைவன் அந்த வாய்ப்பைத் தந்தான். அதையும் ஒரு கை பார்ப்போமே என்று நினைத்தேன். என் வாழ்க்கையில் எதற்கும் நான் இல்லை, முடியாது, கிடையாது என்று சொன்னதில்லை" என்று பாண்டே கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago