அரசியல் கட்சியில் சேருவதாக வதந்தி: விவேக் விளக்கம்

By ஸ்கிரீனன்

அரசியல் கட்சியில் சேரப் போவதாக பரவிய வதந்திக்கு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து பிரச்சாரம் செய்யவுள்ளார் விவேக் என வதந்தி பரவியது. ஆனால், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சார வீடியோவில் மட்டுமே விவேக் பேசியிருந்தார்.

தற்போது அரசியல் கட்சி வதந்தி தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் கூறியிருப்பதாவது:

இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள்.வதந்திகளை நம்ப வேண்டாம்

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

மேலும்